அரசியல், இலக்கியம், சினிமா, நகைச்சுவை மற்றும் பிறவும்...
நான் பார்த்ததும் படித்ததும் மற்றும் ரசித்ததும். நான் பார்த்த என்னுடைய பார்வையில்....
வியாழன், 12 ஜூலை, 2012
செவ்வாய், 10 ஜூலை, 2012
ரயில் பயணங்கள் பாகம் 1
பொதுவாக நாகர்கோவில் அல்லது தென் தமிழகத்தின் கடைசி மூலையில் பிறந்து விட்டால் பயணம் என்பது அவர்களின் பிறப்புரிமை ஆகி விடும்.
இது போன்ற ஆப்பிள் / ஐ பாட் யுகத்தில் கூட திரவியம் தேடி அலைவது நமது அனைவருக்கும் குறிக்கோளாக உள்ளது. திரவியத்தின் அளவு மட்டுமே மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படலாம்.
எனது முதல் பகுதி கோயம்புத்தூர் பாசஞ்சர் ரயிலில் ஆரம்பமாகின்றது. காலை 6 மணிக்கு பீளமேட்டிலுள்ள எனது தனி அறையிலிருந்து ஆரம்பிக்கும் பயணம் இரவு 9 மணிக்கு வீட்டில் முடிவடையும்.
ஒரு முழு நாளை விழுங்கி பல வகையான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இதற்குள் எத்தனை மனிதர்கள், எத்தனை குழந்தைகள், அவர்களை விரட்டும் கோபக்கார தாத்தாக்கள், பாசமுடன் உச்சி முகரும் பாட்டிகள், பக்கத்துக்கு இருக்கையில் இருக்கும் பாப்பாவுக்கு தெரியாமல் தமது குழந்தைக்கு தின்பண்டங்கள் தரும் தந்தைகள்....
மணப்பறை முறுக்கு, கொடைரோடு பழங்கள், கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்பேடா திருநெல்வேலி அல்வா என கடைசியாக மனதும் வயிறும் நிறைந்ததும் நம்மை நாகர்கோவில் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு உல்லாச பயணம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
