வியாழன், 12 ஜூலை, 2012

கையாலாகாதவர்

இதுவரை எதிர் கட்சிகளால்  மட்டுமே கையாலாகாதவர் என விமர்சிக்கப்பட்டவர் தற்போது டைம் பத்திரிகையால் UnderAchiever என அழைக்கப்பட்டுள்ளார்.





அந்த பெருமைமிகு அட்டைப்படம்.

செவ்வாய், 10 ஜூலை, 2012

ரயில் பயணங்கள் பாகம் 1




பொதுவாக நாகர்கோவில் அல்லது தென் தமிழகத்தின் கடைசி மூலையில் பிறந்து விட்டால் பயணம் என்பது அவர்களின் பிறப்புரிமை ஆகி விடும்.
இது போன்ற ஆப்பிள் / பாட் யுகத்தில் கூட  திரவியம் தேடி அலைவது நமது அனைவருக்கும் குறிக்கோளாக உள்ளது. திரவியத்தின் அளவு மட்டுமே மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படலாம்.

எனது முதல் பகுதி கோயம்புத்தூர் பாசஞ்சர் ரயிலில் ஆரம்பமாகின்றது. காலை 6 மணிக்கு பீளமேட்டிலுள்ள எனது தனி அறையிலிருந்து ஆரம்பிக்கும் பயணம் இரவு 9 மணிக்கு வீட்டில் முடிவடையும்.

ஒரு முழு நாளை விழுங்கி பல வகையான மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

இதற்குள் எத்தனை மனிதர்கள், எத்தனை குழந்தைகள், அவர்களை விரட்டும் கோபக்கார தாத்தாக்கள், பாசமுடன் உச்சி முகரும் பாட்டிகள், பக்கத்துக்கு இருக்கையில் இருக்கும் பாப்பாவுக்கு தெரியாமல் தமது குழந்தைக்கு தின்பண்டங்கள் தரும் தந்தைகள்....


 மணப்பறை முறுக்கு, கொடைரோடு பழங்கள், கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்பேடா திருநெல்வேலி அல்வா என கடைசியாக மனதும் வயிறும் நிறைந்ததும் நம்மை நாகர்கோவில் கொண்டு வந்து சேர்க்கும் ஒரு உல்லாச பயணம்.



டுவீட்டுகள்

புது மணத்தம்பதிகளையும் புது காதலர்களையும் மின்சார ரயிலில் பயணம் செய்ய தயவு செய்து அனுமதிக்காதீர்...
கடுப்பேத்துறாங்க மை லார்ட் 

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஆஹா ஏர் இந்தியா

ஆஹா ஏர் இந்தியா ....

பல நெருக்கடிகளில் இன்று சிக்கி மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தவரிடமிருந்து பல வருடங்களுக்கு முன்னால் வந்த இந்தியாவைப்பற்றிய ஒரு நகைச்சுவை தொகுப்பு. "This Makes No Sense".




பதிவிறக்கம் செய்ய உரலி  THIS MAKES NO SENSE

இப்போது இது ஒரு நகை முரண்..