ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

நரேந்திர மோடியும் சத்பாவன இயக்கமும்




குஜராத்தை நிலநடுக்கம், கலவரம் போன்ற பேரழிவிற்கு பிறகு வளர்ச்சிபாதையில் முன்னெடுத்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இது இப்போது ஒரு இறந்து போன செய்தி.

குஜராத் பல துறைகளிலும் தற்போது சிறந்து விளங்குகிறது.

> 24 x 7 மின்சார வசதி அணைத்து கிராமங்களுக்கும்.
> இந்தியாவின் GDP யில் 10% பங்களிப்பு குஜராத் மட்டுமே.
> தொழில் துறையில் முன்னோடி.



நரேந்திர மோடி தன்னை ஒரு சிறந்த செயலாற்றும் முதலமைச்சராக (Effective CM) நிரூபித்து விட்டார்.

இது அவரது இரண்டாவது பரிணாமம் - தன்னை பிரதம மந்திரிக்கான போட்டியில் மறுபடியும் உயிர்ப்பித்துள்ளார். இந்த முறை அவருக்கு உதவிஉள்ளது அமெரிக்க அரசாங்கத்தின் அறிக்கை. இந்த சத்பாவன இயக்கம் அவருக்கு மட்டுமே மத்திய அரசியலில் அவருடைய நிலையை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே பயன்படும்.

ஏற்கனவே ஆளும் மத்திய அரசாங்கம் தனக்கு தானே பல ஆப்பு வைத்துக்கொண்டு உள்ளது.
(உபயம்: ராஜா,கனிமொழி, கல்மாடி)
எனவே அடுத்த தேர்தலில் ஆட்சி கவிழுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

இது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். பழம் விழுவதற்கு முன்பே சாப்பிடுவது யார் என்று முடிவு எடுக்க வேண்டி உள்ளது.



இது பழத்திற்கான போட்டி.
இதைப்பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக