எனது வலைப்பூவில் இரண்டாவது பதிவாக வந்தான் வென்றான் திரைப்படத்தின் விமர்சனத்தை எழுதுகிறேன்.
நான் பல நாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த ஒரு திரைப்படம் வந்தான் வென்றான். ஏற்கனவே நண்பர் ஒருவர் படம் பார்த்து விட்டு வந்து என்னிடம் பேசிய பிறகும் நான் பார்க்க சென்றது எனது தவறு.
மும்பை என்றாலே ரவுடிகள் தான் என்பது கோலிவுட் கணக்கு. நாயகனுக்கு பிறகு தமிழ் சினிமா எவ்வளவோ முன்னேறி விட்டது தொழில்நுட்ப ரீதியிலும் கதைக்களங்களிலும். ஆனாலும் திரு.கண்ணன் போன்ற இயக்குனர்கள் இது போன்ற படங்களை இயக்குவது மனதுக்கு வருத்தமாக உள்ளது. சிறு வயதில் தம்பியை கொலை செய்து விட்டு (தம்பி காப்பாற்றப்பட்டது நந்தாவுக்கு தெரியாது) தப்பியோடி மும்பைக்கு சென்று DON ஆக மாறுகிறார். அவரை திருந்தி போலீசில் சரணடைய வைக்க முயலும் கதாநாயகனாக வரும் ஜீவா.
நந்தா என்ன செய்கிறார் என்பதே கதை. இதற்கான பதிலை ஒற்றை வரியில் எழுதி இருக்கலாம். இதற்காக நாம் இரண்டரை மணி நேரம் காத்திருந்தோம் என்பதே உண்மை.
அண்ணன்-தம்பி சண்டையினை ஜீவா ஏற்கனவே சிங்கம்புலியில் இரண்டு
வேடங்களில் செய்து இருந்தார். மறுபடியும் முயற்சித்தது ஏன் என தெரியவில்லை.

மொத்தத்தில் வந்தான் - சென்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக