புதன், 27 ஜூன், 2012

வாழ்த்துக்கள்

நேற்று திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக நாட்டு மக்கள் அவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

வழக்கமாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சர் பதவியை பிடிக்க பெரும் போட்டியே நடக்கும். ஆனால் தற்போது நாட்டு பொருளாதாரம் இருக்கும் நிலையில் நிதி மந்திரி பதவி தனக்கு வந்து விடக்கூடாது என்றே பலரும் வேண்டிக்கொண்டுள்ளனர்.

all roads leads to rome   என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோலவே இங்கே அனைத்துக்கும் திரு. மன்மோகன் சிங் அவர்கள் தனது மௌனத்தினால் தற்காத்துக்கொள்ள முயற்சிப்பார்.

நன்றி: MTN 




நேரு குடும்பத்திலேயே ஒரே நேரத்தில் இரண்டு ரப்பர் ஸ்டாம்புகளை உருவாக்கியவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் மட்டுமே.

திங்கள், 25 ஜூன், 2012

பிரணாபிற்கு ஆதரவு

பிரணாபிற்கு ஆதரவு 






சிறிது மந்தமாக இருந்த டெல்லி அரசியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

நிதி மந்திரியாக இருந்து சிறப்பாக பணியாற்றிய பிரணாபிற்கு பதவி உயர்வு அளிக்க திருமதி.சோனியா காந்தி அவர்கள் முடிவு செய்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தினை எந்த விதத்தில் பாதிக்கும்  (favour or adverse) என்பது போகப்போக தெரியும்.

பன்ச் லைன்  
பேசாமல் அனைத்து மத்திய மந்திரிகளையும் ஜனாதிபதியாக பதவி அமர்த்தி விடலாம். இந்தியாவாவது தப்பிக்கும்.